Sunday, October 31, 2010

வேறென்ன சாத்தியம்!!!

நகுதல் பொருட்டன்று நட்டல் - மனப்பான்மை
மிகுதற் கணத்தன்று குட்டல் - மனதாபத்தில்
பகுதற் தினத்தன்று தேடி ஒட்டல்!
வெகுவாக கதைபேசி மனம்
இலகுவாக திரிந்தோம்!
குறைவாக நேரம் மட்டுமென
நிறைவாக நேசம் புரிந்தோம்!
ஓருயிர் துடிக்கக் கண்டு ஈருயிரும் துடிப்பதன்றி
வேறென்ன உத்தமம் கண்டதிந்த வானகம்?
எண்ண ஒட்டலினால் ஏற்றம் நிகழலாம்!
உணர்வு ஒட்டலினால் மிஞ்சினால்
உறக்கம் தொலைக்கலாம்! - ஆனால்
உயிர்மை ஒட்டலினால் பூரணம் எட்டலாம்!!
ஒன்றும் கிடைப்பதில்லை!
ஒன்றும் இழப்பதில்லை!
இதுவன்றோ வேதாந்தம்?
உயிரன்றோ நீ எனக்கு!
இதுவன்றி வேறென்ன சாத்தியம்??!!

English translation:
Friendship is not just for loose talks and jokes.
It is about hitting hard on the head with attitude gets high.
It is about going all the way to patch when there is separation.
There were so many moments with lighthearted talks.
Time was the only thing in scarce.
Seeing one soul in grief, the other soul naturally gets affected.
What other wonder has this sky seen?
Intellectual sync can bring career lift.
Emotional sync can, after all, loose sleep.
But soul sync can bring completion.
Nothing to gain. Nothing to loose.
Isn't this vedanta?
You are my soul. What else could be possible??!!



Wednesday, August 04, 2010

Collection of recent Kavithaigal

வில்லினைப்பூட்டி வன்மத்தை தீர்த்திடும் உத்தியை
குய புத்தியை - ஒரு
வேதவன் கோலம் தரித்து நடத்திட்ட வைணவா!
- Tried to write something that coincides (padham by padham) with original bharathiyar's lines but with completely different meaning (lines were:
பல்லினைக்காட்டி வென்முத்தை பழித்திடும் வள்ளியை
குற வள்ளியை - ஒரு
பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா!)



பார்க்கும் வழியெங்கும் விதி பல்லிளிப்பதேனோ? தோற்கும் வலி போதும்..இனி ஒரு கணமும் தாளாதென்று உயிர் துடி துடிப்பதேனோ?
- When i had a worst day at work :(


உயிரை துச்சமென மதித்ததால் நீ உயிர்த்தாய்..
'நான்' மரித்தேன்..வேறு மனம் தரித்தேன்...
உயிர் விழித்தேன்...
என் உணர்வு விழிக்குமுன் நீ சென்றுவிடு..
இல்லை எனை கொன்றுவிடு..
- My kavithai when seeing Aish falling from the branch (Raavanan)