Sunday, August 23, 2009

கவிதை போர்!

I am copy pasting a very good quality Tamil verse war between Vinodh and myself in facebook (http://www.facebook.com/profile.php?id=100000050832291&ref=ts).

Vinodh Rajagopal:
ஒரு வண்ணத்து பூச்சியின் மரணம்
பனி படர்ந்த இளங்காலை நேரம் - சோம்பல் முறித்து தோட்டத்தில் நிற்கையிலே - அழகிய வண்ணத்து பூச்சியொன்று கண்டேன் - பசும்பொன்னின் மஞ்சளும் வெற்றிலை பச்சையும் - மாலைச் சூரியனின் இளஞ் சிவப்பும் - கத்திரி பூவின் ஊதாவும் - ரம்மியமாய் நிறைந்திருந்தது அதன் சிறகில்.

Sadeesh Kumar:
வண்ணத்துபூச்சி: அது அது அதன் அதன் இயல்பாயிருக்கையில், நேரம் தூரம் கடந்த ஒரு நிலையில்லா நிலையில் நான் எனதியல்பில் சிறகடிதிருந்தேன்....என் அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ளும் பெரிய கண்களை உடைய உன் விழியிலிருந்த எனது நிழலுடன் தொடர்பிலிருந்தேன்..இதை விட உன்னுடன் தொடர்பு கொள்ள சாதாரண பூச்சியாகிய எனக்கு தெரியவில்லை!



Vinodh Rajagopal:
ஒரு வண்ணத்து பூச்சியின் மரணம் (தொடர்ச்சி )
அதன் படபடப்பு என்னை அழைப்பதாயெண்ணி - அவ்வழகை எனதாக்கிக் கொள்ள விழைகையிலே - என் காலடியில் சிக்கிக் கொண்டது அப்பூச்சி - சட்டென்று உடைந்தது என் உலகம் - மிதிபட்டது பூச்சி என்றாலும் - என் உள்ளங்காலில் ஒட்டிக் கொண்ட - அதன் வண்ணங்களை பார்க்கையிலே - நான் மரணித்து போனேன்.

Sadeesh Kumar:
வண்ணத்துபூச்சி: உன் மனதின் விருப்பங்கள்/ஏக்கங்கள்-க்கு எனது சிறகில் வடிவம் தேடும் உனக்கு, உயிர் வரைந்த உருவங்கள் கொண்ட எனது இறக்கையின் அழகு தெரிய வாய்ப்பில்லைதான்!!

Sadeesh Kumar:
வண்ணத்துபூச்சி: Moreover (?!), மரணித்து போனதோ நீ என்ற உனது எண்ணங்கள் மட்டும் தான்!

Vinodh Rajagopal:
ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சியின் சிறகும் பேரழகு என்பதை நான் மறுக்கவில்லை என் கனவின் பிம்பத்தை பிரதிபலிக்கும் சிறகை மட்டுமே நான் தேடுகிறேன் மிதிபட்ட பூச்சியினும் மிதித்த எனக்குதான் அதிக வலி என்பது பூச்சிக்கோ அந்நிகழ்வை குற்றஞ்சாட்டுபவனுக்கோ புரிய வாய்ப்பில்லைதான்.

Vinodh Rajagopal:
நானும் என் எண்ணமும் ஒரு புள்ளியில் இணைந்ததிருக்கையில் இரண்டில் எது மரணித்தாலும் என் உடல் வெறும் கூடுதான் 7 hours ago

Sadeesh Kumar:
வண்ணத்துபூச்சி (கொஞ்சம் hitech): சிறகை பிய்த்து பார்த்து சொந்த எதிர்பார்ப்புகளோடு tkdiff செய்து பார்க்கும் மனப்பான்மைக்கு எந்த உயிர்ப்புள்ள ஜீவனும் நிறை உணவில்லைதான்!

Sadeesh Kumar:
வண்ணத்துபூச்சி: இறந்த எண்ணங்களின் சவத்தின் மீதேறி இரங்கற்பா பாடும் சுய பச்சாதாப மனம் யாரோ?

Vinodh Rajagopal:
தன் தவறை ஒப்புக்கொள்வது தமிழ் வீரமேயன்றி சுய பச்சாதாபத்தின் வெளிப்பாடில்லை கண்டீர் நான் சுத்த வீரனென்று எனக்கு தெரியும் ஓநாயை இருந்து பார் அதன் நியாயம் புரியும்

(Another post):

Vinodh Rajagopal:
தீரா காமத்தில் எரிந்துருகுமாம் - மென் ஸ்பரிசம் பட்டால் உடைந்து நொறுங்குமாம் - இளமையில் கூத்தாடி முதுமையில் தள்ளாடி - நீரில் எழுத்தாகும் யாக்கை

Sadeesh Kumar:
எரித்துருக்கும் தீராக் காமம் உயிர் கொடுக்குமாம்! மென் ஸ்பரிசத்தில் குழைந்து உருகுமாம்! இளமையில் விளையாடி முதுமையில் வசைபாடி நுன்னுயிர்க்கு தன்னையே தானமளிக்கும் யாக்கை! முழுதும் புரிந்திருக்குமாம் "Matter=Energy"-என்னும் வாக்கை!

Sadeesh Kumar:
"சும்மா சும்மா நுளைக்காத உன் மூக்கை!" - என்றெல்லாம் comedy அடிக்க வேணாம்!

Vinodh Rajagopal:
எப்பொழுதும் matterileya சிந்தித்து Energyயை வீணடிக்கும் தங்கள் கூற்று நிஜமாய்தான் இருக்கும்